கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மின்கட்டண தொகை தெரிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் செல்போன் எண் பதிய அழைப்பு

தஞ்சை, : மாதாந்திர மின்கட்டணம் குறித்த தகவல்கள் எஸ்எம்எஸ் வாயி லாக அறிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் செல்போன் எண்ணை பதிவு செய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் தங்களுடைய மாதாந்திர மின்கட்டணத்தை வெளியூர், வெளிநாடு செல்லும் காரணத்தால் அல்லது வீடு பூட்டப்பட்டு இருந்தாலோ டோர்லாக் என்று மின்வாரிய ஊழியரால் பதிவு செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் மின்நுகர்வோர் முன்பணமாக தாங்களே முன்வந்து செலுத்தும்பட்சத்தில் தங்களுடைய தொகைக்கு மின்வாரியம் 9 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதனால் மின்இணைப்பு துண்டிப்பு தவிர்க்கப்படுகிறது. 

மின்நுகர்வோர் தங்களது பகுதியில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண், செல்போன் எண் ணை பதிவு செய்து மின்வாரியம் அனுப்பும் எஸ்எம்எஸ் வாயிலாக தங்களது மாதாந்திர கட்டணம், தொகை கட்டுவதற்கான கடைசி தேதியை அறிந்து கொள் ளலாம். 

மின்கட்டணம் செலுத்த காலம், பணம், எரிபொருள் ஆகியவற்றை வீணாக்காமல் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ள இணையதள வசதியை பயன்படுத்தி கொள் ளலாம். <ஷ்ஷ்ஷ்.tஸீமீதீ.வீஸீ> என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு வீட் டில் இருந்தபடியே மின்கட்டணத்தை மின்நுகர் வோர் செலுத்த முடியும். 

மேலும் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, எச்டிஎப்சி வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேசனல் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, கனரா வங்கி, பெடரல் வங்கி மூலம் தங்களது மின் கட்டணத்தை செலுத்த முடியும். மேற்கண்ட அனைத்து வசதிகளையும் மின்நுகர்வோர் பயன்படுத்தி கொள்ளலாம்.

0 கருத்துகள்: