கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருச்சியில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி

Islamic Expo in Trichy

டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெறவுள்ள இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சியின் (திசை 2013) அமைப்பாளர் முனைவர் ஹஜ் மொய்தீனுடன் ஒரு நேர்காணல்

· கண்காட்சி நடத்துவதன் நோக்கம் என்ன?

இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளைக் களையவும் அமைதி தேடி அலையும் மக்களுக்கு அமைதியான வாழ்க்கைக்குரிய வழிகாட்டுதலை வழங்கவும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது

· கண்காட்சி நடத்தத் தூண்டுகோலாக இருந்தது எது?

இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரச்சாரத்தினால் அதிகமான சகோதர சமுதாய மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளஆவலுடன் இருப்பதை நமது சத்தியச்சோலைப் (Islamic Information Centre) பணிகளின் மூலமாக உணர முடிந்தது. இதுவே இக்கண்காட்சி நடத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்தது.

· கண்காட்சியின் உள்ளடக்கம் என்ன?

இன்றைய பிரச்னைகளின் ஆணிவேர் தனிமனிதனே. எனவே நமது கண்காட்சி 80க்கும் மேற்பட்ட அரங்குகள் மூலமாக தனிமனிதன், குடும்பம்,சமூகம், இறையியல் ஆகிய தலைப்புகளின் மூலம் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை மாதிரி வடிவங்களாக (Models)  வைக்கவுள்ளோம்.

· கண்காட்சியின் தலைப்பாக “திசை’ என ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

மனித வாழ்க்கையின் வெற்றிக்குரிய சரியான திசையைக் காட்டவேண்டுமென்பதே எங்களது நோக்கம். ஆகவேதான் “திசை’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.

· எவ்வளவு பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்?

நமது பிரச்சாரம் மாவட்ட அளவில் சென்றுள்ளது. இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது குறைந்தது 30000 பேர் வருவார்கள் எனஎதிர்பார்க்கிறோம்.

· உங்களது அழைப்பு சகோதர சமுதாயத்தினருக்கு மட்டுமா?

நமது இலக்கு சகோதர சமுதாயத்தினர்தான். இருப்பினும் முஸ்லிம்கள் முழுமையான புரிதல் இல்லாதவர்களாக இருப்பதால் நமது அழைப்பு அனைவருக்கும் ஆகும்.இந்தஅடிப்படையில் பள்ளி, கல்லூரி, அரபி பாடசாலை மாணவ மாணவியர் மற்றும் அனைத்து இளைஞர்கள் யுவதிகளுக்காகவும் நாம் சிறப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றோம்.

· கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளர்கள் யார் யார்;?

நமது கண்காட்சியில் லேனா தமிழ்வாணன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் அ.ஷப்பீர் அஹமது, மார்க்க அறிஞர்கள், கல்லூரி முதல்வர்கள், நகரப் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ்.

.பேட்டி : T.E. நாஸர்
தொடர்புக்கு: அமைப்பாளர் முனைவர் ஹஜ் மொய்தீன் (9445251755)

0 கருத்துகள்: