கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம்


ஃபலஸ்தீனம் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற நேற்று ஐ.நா. வில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் பாலஸ்த்தீனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஃபலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தொடர்ந்து, ஃபலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் யாசர் அராபத் தன் மரணத்திற்கு முன் பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இந்த நிலையில் தனி நாடு என்ற ஐ.நா.வின் அங்கீகாரத்திற்கான ஒட்டெடுப்பு நடைபெற்றது. இதில் பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது

மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 138 நாடுகள் ஃபலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன. இந்த வெற்றியின் மூலம் பாலஸ்தினத்துக்கு ஐ.நா. சபையின் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் முழுமையாக ஒரு தனி நாடு என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முந்தைய நிலையான 'பார்வையாளர் நாடு" என்கிற தகுதியை ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு மூலம் ஃபலஸ்தீனத்துக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் 'பார்வையாளர் தகுதி' பெற்ற நாடாகி இருக்கிறது பாலஸ்தீனம்.

ஃபலஸ்தீனம் -இஸ்ரேல் இடையேயான மோதல் நிலையால் இன்னமும் ஒரு தனிநாடாக ஃபலஸ்தீனம் அங்கீகரிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத நாடு (non- member state) என்ற தகுதியோடு ஃபலஸ்தீனம் இருந்து வருகிறது. இத்தகுதிக்கு ஒருபடி மேலாக அதாவது தனிநாட்டு அங்கீகாரத்துக்கு முந்தைய படிநிலையான ஐ.நாவின் 'பார்வையாளார் தகுதி"பெற்ற நாடாக (Observer status) ஃபலஸ்தீனம் உருவெடுத்திருக்கிறது. இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கக் கூடிய உரிமை ஃபலஸ்தீனத்துக்கு இன்னமும் கிடைக்காவிட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையின் இதர அமைப்புகளில் பாலஸ்தீனம் இணைந்து செயல்படலாம். குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக நேரடியாக முறையிடக் கூடிய தகுதி ஃபலஸ்தீனத்துக்குக் கிடைத்திருக்கிறது்.

ஃபலஸ்தீனத்துக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை ஏற்க முடியாத அமெரிக்காவும் இஸ்ரேலும் காசா போர் முனையில் மேலும் மோசமான விளைவுகளை இது உருவாக்கும் என்று குமுறியிருக்கின்றன.

ஐ.நா.வின் அங்கீகாரத்தை ஃபலஸ்தீனம் பெற்ற செய்தியை அந்நாடு உற்சாகமாகக் கொண்டாடியது. யுத்த முனையான காசா பகுதியில் குண்டு மழை பொழிய உற்சாகம் கரைபுரண்டோடியது. ஐக்கிய நாடுகள் சபையின் 194-வது நாடாக ஃபலஸ்தீனம் உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

0 கருத்துகள்: