கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல


                                அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
“இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல” என்று நல்ல மனிதர்கள் சொன்னாலும் கேர்க்கமாட்டோம்.
 “நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;” (அல்-குர்ஆன் 3:103) என்று அல்லாஹ் சொன்னலும் கேர்க்க மாட்டோம்.

ஒற்றுமையாலும், இஸ்லாமிய கலாச்சரத்தினாலும் (குர்ஆன், ஹதிஸ் முறைப்படி வாழ்ந்ததாலும்) முஸ்லிம்களுக்கு உலகில் பல இடங்களில் பல வெற்றிகளை அல்லாஹ் கொடுத்தான். ஸ்பெயின் நாட்டில் 700 வருட இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் 500 வருட முகலாய ஆட்சி, ஸ்பெயின் முதல் சினா வரை கி.பி. 700 முதல் கி.பி. 1500 வரை முஸ்லிம்களுக்கு விஞ்ஞான அறிவியல், அரசாட்சி என பல வெற்றிகளை முஸ்லிம்கள் ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றியதால் கொடுத்த அல்லாஹ்….

 பிறகு அவர்களிடம் ஏற்ப்பட்ட ஒற்றுமையின்மை, சிறு சிறு குழுச்சன்டை கலாச்சார மாற்றம் போன்ற காரனங்களால் அவர்களிடமிருந்து ஆட்சியை பிடிங்கி முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொடுத்தான். முஸ்லிம்களின் கலாச்சார மாற்றத்தால் நம்முடைய அறிவியல் கண்டுபிடிப்பு, ஆட்சி அதிகாரம், அறிவுத்திறன் போன்ற அனைத்தும் முஸ்லிம் அல்லாதவர்களின் கையில் சென்றதால் உலகில் பெரும் பகுதிகளில் முஸ்லிம்மாகிய நாம் கஷ்டப்படுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது…

 நமக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை அல்லாஹ்வுக்காக மறந்து இஸ்லாம் சொல்லும் முறைப்படி வாழ்ந்து ஒற்றுமையுடன் இஸ்லாமிய காலாச்சாரத்தை காப்போம், வெற்றி பெறுவோம்..
இன்ஷா அல்லாஹ்…..
http://www.imdtime.com/

0 கருத்துகள்: