கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் சரமாரி கேள்வி!


இந்தியாவில், "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம் எங்கே இருக்கிறது? அதன் நிர்வாகிகள் யார் யார்? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர், எம்.பி.க்கள்.

அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் - கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் - பல ஆண்டுகள் சிறையில் கழித்தபின் நிரபராதிகள் என விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும் - பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது.ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்ற குழு 2 பக்கங்களை மட்டுமே கொண்ட மனுவை கொடுத்துவிட்டு, தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர்.

ராம்விலாஸ் பாஸ்வான் :
2 வருடங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு, வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என அளித்த உத்தரவாதம் என்ன ஆனது?
ஒரு நேரத்தை "கெடு"வாக நிர்ணயித்து அதற்குள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் :
இம்முறை, இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமல், நானே - நேரடியாக கவனிக்கிறேன்.மேலும், எதிர்காலத்தில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் தடுக்கவும் - கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு - நிரபராதிகளின் மறுவாழ்வு - தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்றவைகளுக்கு வலுவான "மெக்கானிசம்" தயாரிக்கப்படும் என்றார்,பிரதமர்.

ராம்கோபால் யாதவ் :
உத்தரபிரதேச அரசு, அப்பாவிகளை விடுதலை செய்ய முயன்றால், இன்று இவர்களை விடுதலை செய்யும் நீங்கள், நாளை இவர்களுக்கு "பத்மபூஷன்" விருது கொடுப்பீர்கள், என "நீதிபதிகள் கமென்ட் அடித்து" அப்பாவிகளை விடுவிக்க மறுத்த செயலை சுட்டிக்காட்டினார்.

முஹம்மத் அதீப் :
முஸ்லிம்களை தீவிரவாத இயக்கங்களின் பெயர்களோடு தொடர்பு படுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சதி, இந்த சதிவலையில் இந்தியா விழுந்து விடக்கூடாது, என்றார்.

மணிசங்கர் அய்யர் :
அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.

பா.ஜ.க.வைத்தவிர, அனைத்துக்கட்சிகளின் எம்பிக்களும் இணைந்து சென்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்ததது, குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: