கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அரிசிச்சோறு அமிர்தமா? ஆபத்தா?

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்ட வட்ட மாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நா ட்டில் வேதங்களிலும், சீன இல க்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதி கம் உண்டு. கிடைத்திருக்கும் சான் றுகளை வைத்துப்பார்க்கு ம்போது மொத்தத்தில், கிட்டத்த ட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் ஆட்சி செய்து வருவதை மறுக்க முடியாது.


 ஆனால் இன்றைய நிலைமையோ.. அரிசியா? அய்யயோ..சுகர் வரு ம் .. தொப்பை வரும்… குண்டாயிடுவோம்..என்ற பீதி! இதில் எந்த அளவு உண்மை? அரிசி ஆபத்தானதா? அவசியமில்லாததா?

 கிட்டத்தட்ட 4 லட்சம் அரிசி வகைகள் உலகில் இருந்தன. சில மட் டும் இன்னும் இருக்கின்றன.கருப்பு, சிவப்பு, பழுப்பு, பச்சை என பல வண்ணங்களீலும் குட்டை மத்தியம் நெட்டை என வடிவிலும் இருக் கும் அரிசியில் இன்றைய அறிவியல் கலோரிக் கணக்கு என்ன தெரி யுமா? 70% கார்போஹைட்ரேட் 6-7% புரதம் 1-2% நார் சத்து 12-13% நீர் மற்றும் சில நுண்ணிய அளவி லான கால்சியம், மக்னீசியம் முதலான கனிமங்கள். கிட்ட்த்தட்ட கோதுமை, சோளம் முதலான பிறா தானியங்களிலும் இந்த அளவில் தான் சத்து விஷயங்கள். புரத அளவில் கொஞ்சம் தூக்கலான்கவும் கார்போ ஹைட்ரேட் அளவில் லேசான மந்தமும் கோதுமைக்கும் சோளத்தி ற்கும் உண்டு. இந்த ஒரு விஷயத்தை வைத்து வடனாட்டு கோதுமை க்கும் வெளி நாட்டுச் சோளத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் போக்கு வளர்ந்து வருவது வேதனை.

 இங்கு ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தட்டைப்போ ட்டு அரிசியை குவித்து யாரும் சாப்பிடப் போவதில்லை. அரிசியுடன் பருப்போ, குழம்போ, காயோ, கீரையோ சேர்த்துத் தான் சுவைக்கி றோம். அப்போது அரிசியு டன் சேர்ந்து பருப்பின் புரதமும், காய் கறிகளின் கனிமமும், குழம்பின் சீரணத் தை சீராக்கி, இன்னும் அதன் சத்துக்கள் அனைத்தையும் சிறப்பாக குடலுறிஞ்சிக ளால் கொண்டு செல்லும் தன்மையும் கிடைப்பது தான் அரிசி கூட்ட ணியின் அற்புத சிறப்பு அம்சம்..ஒரு வேளை நீங்கள் கார்ன் ஃப்ளேக் ஸில் காரக் குழம்பும் புடலங்காய் பொரியலும் போட்டு சாப்பிட்டா லோ, சப்பாத்திக்கு சாம்பார் ஊற்றி பருப்பு உசிலி சேர்த்து சாப்பிட் டால் அரிசிப் பய னை கொஞ்சம் அடையலாம்.

 அரிசி நம் மரபணுக்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பரிச்சியமா ன ஓர் உன்னத உணவு. புதிய உணவுகள் எது வந்தாலும் உடலைப் பொறுத்த மட்டில் எல்லை தாண்டிய ஊடுருவலாக மட்டுமே நம் உடல் கண்காணிக்கும். பெரிய வில்லன் இல்லை என்று தெரிந்த உடன் மட்டுமே அதற்கு இடமளிக்கும். அப்படித்தான் நாம் புது புது உணவுகளை எப்போதாய்ச் சாப்பிட்டாலும் பெரிதாய் எதுவும் துன்பப்படுவதில்லை. அதே சமய த்தில் நமக்கு அன்றாடம் பரிச்சயமான உணவுகளில் இருந்து முற்றிலும் விலகி ப் போகும் போது உடம்பு சற்று கலவரப் படும்.

 அரிசி விஷயத்தில் அப்படித்தான் நிகழ்ந்து வருகிறது. பரம்பரை அரிசி ரகங்கள் தொலைந்து போய், கூடுதல் மகசூல் என்ற கொள்கையுட னும், நீடித்த சேமிப்பிற்கென்றும் சொல் லி இந்த பாலிஷ் ரகங்கள் வந்ததில் தான் பிரச்னை துவங்கியது. பூ வச்சி, பொட்டு வச்சி, ஸில்க்கி பாலிஷ் போட்டு அழகுபடுத்த அரிசி என்ன சினிமாவில் நடிக்கவா வந்தது? அப்ப டித்தான் வணிகர்கள் அரிசி வணிகத்தை வசப்படுத்த, அதனை பட்டை தீட்டி வெண்ணிற முத்தாக்க முயன்றதில், அதன் சத்துக்களில் பல வீணாகி, வெறும் சர்க்கரைச்சத்தை மட்டும் அதிகம் தரும் உணவாக மாறியது அரிசியின் தற்கால அவலம்.

 இன்னும் தொலைந்து போகாமல் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆங்கா ங்கே இருந்து தான் வருகிறது. உடலு க்கு ஊட்டம் அளிக்கும் மாப்பிள்ளைச் சம்பா எனும் சிகப்பரிசி தெற் கத்தி மாவட்டங்களில் பிரபலம். பிரசவத்திற்குப்பின் பால் சுரப்பிற்கு அதிகம் பயன்படும் நீல ச்சம்பா, குழியடிச்சான் அரிசி ரகங்கள் இன் னும் இங்கு உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறை ஊரின் முறுக்கும் அதன் மொறு மொறு ருசிக்கும் அந்த ஊரின் கல்லி மடையான் ரகம் தான் காரணம்.

 கைக் குழந்தை பாலில் இருந்து திட உணவிற்கு மாறும் தருவா யில் உடைத்த அரிசிக் குருணை , பாசிப்பருப்பு சேர்த்த குழைந்த கஞ்சி இவற்றுடன் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொடுப்பது குழந்தை உடல் எடை சீராக ஏற ப் பெரிதும் உதவும். அதுவும் குறைபிரசவத்தில் ஏழாம் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் இந்த கஞ்சி மிகச் சிறப்பக உதவிடும். குழ ந்தைக்கு கொடுக்கும் போது பச்சரிசியாக வும் இளையோருக்கு புழு ங்கலரிசியாகவும் முதியோருக்கு அவலாகவும் கொடுப்பது அரிசியி ன் சீரணத்தை தேவைக்கேற்ற படி நெறிப் படுத்தும்.

 பொதுவாக புழுங்கல் அரிசி தா ன் அன்றாட உணவாக எல்லோ ருக்கும் சிறந்தது. அரிசியின் வெளிப்புறத்தில் உள்ள சத்துக் கலை, கனி மங்களை, அதன் தவிட்டில் உள்ள விட்டமின்க ளை, உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தன்மையுள்ள எண்ணெயை எல்லவற்றையு ம் அரிசிக்குள் திணித்து ’லாக்’- செய்த அற்புத வித்தை புழுங்கல் செய்யும் முறை. எப்படி இந்த Food Processing technology வித்தை யை நம் முன்னோர் செய்திருந்தனர் என்று இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும்.

 சிகப்பரிசியின் ’லைகோபின்’- எனும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சத்து அன்றாடம் உடலில் சேர் ந்தால் புற்று நோயின் தாக்கும் வாய்ப்பு குறைவு.சிகப்பரிசியை அவலாகவோ அல்லது புட்டு செய்தோ குழந்தைகட்கும் முதி யவருக்கும் அவ்வப்போது கொ டுப்பது அவர்கள் நோய் எதிர்ப் பாற்றல் கூட மிக மிக நல்லது.

 ஞவரை என்று ஒரு அரிசி ரகம் கேரள அரிசி வகையில் உண்டு. ஆயுர் வேதத்தில் மிக மிக சிறப்பாகப் பேசப்படும் இந்த அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட மூட்டுவலி வாத நோய்களுக்கு மிக நல்லது. கொஞ்சம் ரொம்பவே விலை அதிகமாக விற்கப்படும் இந்த அரிசி கூடுதல் பலனிருப்பதால் விருந்துக் இந்த ஞவரை அரிசிக்கஞ்சியை விசேஷமான நாட்களில் பயன்படு த்தலாம்.

 குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் அரிசி மீதான பழி அதிகம். சோற் றைத் தின்று தின்று இந்த வியாதி வந்திடுச்சு-ன்னு சொல்வது பிரபல மாகி வருகிறது. தவறு அரிசியில் கிடையாது. அதன் அளவிலும், அத ற்கேற்ற உடலுழைப்பும் இல்லாத து தான். நல்ல உடல் பயிற்சி, நடை ப்பயிற்சி அவற்றுடன் கீரை காய் கறி அதிகம் சேர்த்து அளவான புழுங்கல் அரிசி சாதம் சர்க்கரையை த்டாலடியாக உயர்த்திடாது. முழுகட்டு கட்டி சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் 2 மனீ நேரம் உறங்கு வதும், எப்போதும் டென்ஷனில் அதி கம் நொறுவலுடன் கூடவே ஃபுல் மீஸ் கட்டும் ஆசாமிக்கும், ”நடை யா? அதுக்கெல்லாம் நேரமே இல்லை, எனும் சோம்பேறி கட் கும்தான் அரிசி ஆபத்து. அப்படி ப்பட்ட வருக்கு, அரிசி என்ன பாற்கடல் அமி ர்தம் தந்தாலும் வியாதி நிச்ச யமே!

 மாறாக அதிகம் கோதுமை உணவை மட்டுமே உடம்பைக் குறைக்கி றேன், சர்க்கரையைக் குறைக்கிறேன் என சாப்பிடும் நம்ம ஊர்க்காரருக்கு மூலம், மலச்சிக்கல் தோல் நோய் வரும் வாயு ப்பு அதிகம். அதற்காக கோதுமை கெடுதி இல்லை. அது வட நாட்ட வரின் (குளிர் அதிகமுள்ளவரின்) பிரதான உணவு. நம்மைப் பொறு த்த மட்டில் அரிசியைக் குறைத் து ராகி, கம்பு, தினை என சிறு தானி யங்களின் பயன்பாட்டை கூட்டுவது நல்லது.

 இனி நீங்கள் ஆரோக்கியம் கருதி அரிசி வாங்கச் சென்றால், ரசாயன உரமிடாமல் வளர்த்த ஆர்கானிக் பட்டை தீட்டாத பிர வுன் அரிசி, புழுங்கல் அரிசி, கை க்குத்தல் அரிசி, சிகப்பரிச் சம்பா , இன்னமும் கொஞ்சம் தேடிப்பிடித்து பாரம்பரிய அரிசி ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா முதலான அரிசி ரகங்கள் என வாங்கிச் சமை யுங்கள். அரிசி உங்கள் வீட்டு அமிர்தமாகும்!
 * எம் அப்துல் காதர்

0 கருத்துகள்: