கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இந்திய அரசியல் வரலாறு முஸ்லிம்களின் பக்கம் திரும்புகிறது!

சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு உத்திரபிரதேசம், தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் இன்னும் சில மாநிலங்களிலும் மிகப்பெரும் அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் ஆட்சியை நிர்னையிக்கும் சக்தியாக இருந்தார்கள், அதன் தொடர்ச்சியாக கூட சென்னை மாநகரத்தின் எதிர்கட்சியாக இருந்த வரலாறும் உண்டு.

ஆனால் இந்த நிலை அதிக ஆண்டுகள் நீடிக்கவில்லை அடுத்த சில ஆண்டுகளில்(1972க்கு பின்) இந்திய முஸ்லிம்களின் அரசியல் தலைமை முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் வெறும் தங்களுக்கு கிடைக்கும் சீட்டுகள், அமைச்சர்பதவி, வாரியபதவி, பணம் ஆகியவற்றை மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

சுதந்திரத்திற்காக போராடி உயிர், உடமை, மற்றும் அரசு பதவிகளை இழந்த இந்த முஸ்லிம் சமுதாயம் அன்று இழந்த அந்த இழப்புகளை சுதந்திர இந்தியாவிலும் பெறமுடியாமல் தங்களுக்கு கிடைத்த தலைவர்களும் அதுபற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் தங்களுடைய சுயமுன்னேற்றத்தை பற்றி மட்டுமே சிந்தித்து வந்தார்கள். இதனால் இந்த முஸ்லிம் சமுகம் செருப்பு தைத்தல், கூலி வேலை, குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்கும் பிழைப்பு தேடிச்சென்றார்கள் இந்த இழி நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் முஸ்லிம் தலைவர்களின் செயல்களை கண்டு வெறுப்படைந்த முஸ்லிம்கள் தங்களுடைய வாக்கு சீட்டை அந்த முஸ்லிம் தலைவர்கள் கூறும் அரசியல் கட்சிகளுக்கு போடாமல் தங்கள் மனம் போனபோக்கில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பிரித்து பயனற்றதாக ஆக்கினார்கள். இதனால் இந்தியாவில் வெறும் 4.2% பார்ப்பன சமுக ஆதரவை மட்டும் பெற்ற பி ஜே பி கூட முஸ்லிம்கள் பெருபான்மையாக உள்ள தொகுதியில் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் 1992 ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகு குறிப்பாக தமிழகத்தில் இந்திய முஸ்லிம்களின் மிகவும் பின்தங்கிய நிலையை மார்க்கம் மற்றும் அரசியல் ரீதியில் ஆழ்ந்து சிந்தித்த ஒரு சில தலைவர்கள், இந்த சமுகம் முன்னேற ஒரே மந்திரம் இந்தியாவில் அவர்களுக்கு கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஓதிக்கிடு மட்டுமே தீர்வு என்று விதையை முஸ்லிம் மக்களின் உள்ளத்தில் விதைத்தது , அதன் விளைவு முஸ்லிம்கள் எந்த அமைப்பும் சாராமல் ஒன்றினையவும் வித்திட்டது அதுமட்டும் அல்லாமல் அது இந்தியா முழுவதும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் கூறலாம், மேலும் அந்த விளைச்சல் இப்போது பயன் தரதயாராகி உள்ளது என்று கூறினால் மிகையாகாது.

முஸ்லிம்களின் இடஓதிக்கீட்டை எதிர்த்த ஜெயலிலதா ,ஏன் கம்னிஸ்டுகளும் தாங்கள் அரசியல் நடத்த வேண்டும் என்றால் இட ஒதிக்கீடு விசயத்தில் நம்முடைய நிலையை மாற்றியே ஆகவேண்டும் என்ற நிலைக்கும் வந்தார்கள் என்பதை அரசியல் வரலாறு கூறும், ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு கொடுத்த இட ஒதிகீட்டை எதிர்த்த ஜெயலலிதா தன்னுடைய ஐந்தாண்டு பதவி முடியும் தருவாயில் அதாவது தேர்தலுக்கு முன்பாக இட ஒதிகீடுக்கு என்று ஒரு கமிஷனை ஏற்படுத்தினார், அதுபோல் கம்னிஸ்டுகளும் மேற்கு வங்காளத்தில் கடந்த தேர்தலுக்கு முன்பும், தேர்தல் அறிக்கையிலும் முஸ்லிம்களின் இட ஒதிக்கீடு பற்றி கமிஷனை ஏற்படுத்தினார்கள்.

இதுபோன்று முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று ஆட்சி கட்டிலில் இரண்டுமுறை அனுபவித்த காங்கிரஸ் முஸ்லிகளை ஏமாற்றி வந்தது, ஆனால் அவர்களையும் அசைத்து பார்க்க வந்தது உ.பி தேர்தல், வழியின்றி உப்புக்கும் சப்புக்கும் இல்லாத அனைத்து சிறுபான்மை இனத்தவர்களையும் சேர்த்து இட 4% ஒதிக்கீடு என்று ஏமாற்றியது.

ஆனால் இதனை பற்றி எதுவும் கவலை கொள்ளாத உ.பி முஸ்லிம்கள் தங்களுக்கு உண்மையாக இட ஒதிக்கீடு தருவார்கள் யார் என்பதை எடை போட்டு பார்த்தார்கள், கடந்த ஐந்து ஆண்டில் மாயாவதியால் எந்த பயனும் இல்லை அதுபோல் கடந்த எட்டு ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துவரும் காங்கிரசும் இட ஒதிக்கீடு என்ற பெயரில் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது, அடுத்த ஒரே கட்சி சமாஜ்வாதி கட்சி மட்டுமே அவர்களுக்கு மிஞ்சி இருந்த நிலையில் அவர்கள் தேர்தல் அறிக்கையும் வந்தது.

அதில் முஸ்லிம்களுக்கு 18% ஒதிக்கீடு, முஸ்லிம்கள் வாழும் பகுதியில் கல்விசலைகள், பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சிபெற்ற முஸ்லிம் பெண்களுக்கு மேல்படிப்புக்கு பண உதவி, திருமண உதவி, பொய்வழக்குகள் விரைந்து விசாரித்தால் இப்படி இன்னும் சில நல்ல திட்டங்களும் அவர்களிடம் இருந்தது. இதில் மிகமுக்கியமான விசயமாக முஸ்லிம்களின் முன்னேற்ற விசயம் இருந்ததால் பிரிந்து கிடந்த முஸ்லிம்கள் ஒன்றினைந்தார்கள் அதன் விளைவு தான் தற்போது வெளியாகி உள்ள உ.பி தேர்தல் முடிவு.

ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வாக்குகளை பெற்ற சமாஜ்வாதி கட்சி ஆட்சியை கைபற்றியது, உ.பி சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 403 உறுப்பினர்களில் 64(SP-43, BSP-15, INC-4, PP-3, QED-2, IMC-1)முஸ்லிம் உறுப்பினர்கள் என்ற இந்திய அரசியல் வரலாற்றை மாற்றி எழுதினார்கள், அரசின் கணக்கு படி உ.பி மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 18% ஆகும், ஆனால் இன்று தேர்வாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் 16% என்றும், புதியதாக அமைக்கப்பட்ட உ.பி அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் 21%(மொத்தம் 43 அமைச்சர்களில் 10 முஸ்லிம் அமைச்சர்கள்) என்று இருப்பது எல்லா அரசியல் தலைவர்களையும் முஸ்லிம்கள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது.

இது போன்று தமிழக முஸ்லிம்களும் சிந்தித்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்ற பெயரில் தாங்கள் தலைவர்களுக்கு கிடைக்கும் ஓன்று, இரண்டு சீட்டுக்காகவும், வாரிய பதவிக்காகவும் ஏங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்ற பெயரில் இயங்கும் அணிகளை புறக்கணித்து, முஸ்லிம்கள் இட ஒதிக்கீடு என்ற ஒரே கோரிக்கையை முன்னிருத்தி தாங்களுடைய வாக்குகளை பயன்படுத்தினால் உத்திரபிரதேசத்தில் ஏற்பட்ட வரலாறும் தமிழகத்திலும் ஏற்படும்.
முஸ்லிம்கள் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் என்பதில் வேறு கருத்து இல்லை.

“எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.”(அல் குர்ஆன் 13:11)
இப்படிக்கு
அபுவஜிகா
thanks:http://kadayanallur.org/



0 கருத்துகள்: