கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இந்தியாவில் 1,70,000 ஆயிரம் பேருக்கு ஹஜ் செல்ல வாய்ப்பு!

India’s Minister of State for External Affairs E. Ahamed, 3rd left, with Haj Minister Dr. Bandar Al-Hajjar
புதுடெல்லி:சவூதி அரேபியாவுடன் இவ்வாண்டிற்கான
ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1,70,000 பேருக்கு இம்முறை இந்தியாவில் இருந்து புனித ஹஜ்ஜிற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


வெளியுறவு துணை அமைச்சர் இ.அஹ்மதின் தலைமையில் உயர்மட்டக்குழு சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார துறை அமைச்சர் டாக்டர் பந்தர் பின் முஹம்மது பின் ஹம்ஸா அஸத் ஹாஜருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவில் இருந்து வரும் ஹஜ்ஜிற்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை பரிசீலித்து 10 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீட்டை அனுமதிக்கவேண்டும் என்று பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதுத்தொடர்பான தீர்மானம் ஹஜ்ஜையொட்டிய கட்டத்தில் உருவாகும்.

புனித பயணிகளுக்கு மெட்ரோ ரெயில் வசதியை அனுமதிக்கவேண்டும் என்றும் இந்திய குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும்.
http://www.thoothuonline.com/

0 கருத்துகள்: