கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இதுதான் இறைவிருப்பம்!

manathodu-manathai1-270x138ஒருமாலை ​நேரம். சில இளைஞர்கள் குதிரை ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுக் ​கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கவர்னரின் மகனும் உண்டு. பந்தயத்தில் முதலில் வரும் குதிரை தன்னுடையது என்றெண்ணிய அவன் மகிழ்ச்சியில்
 துள்ளிக் குதித்தான்.
ஆனால் சில மணித்துளிகளில் உண்மை விளங்கிற்று. ஓட்டப் பந்தயத்தில்​ வெற்றி ​பெற்றது தன் குதிரையல்ல. பட்டணத்தில் வசிக்கும் ஒரு சாதாரண​ இளைஞன்தான் ​வெற்றி ​பெற்றது. கவர்னரின் மகன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டான். எல்லோரும் தன்னை ஏகடியம் ​செய்வது​போலிருந்தது.
அந்த இளைஞன் மீது ​கோபம் ​​கோபமாக வந்தது. “கண்ணியமிக்க மக்களுடன்தான் நீ ​போட்டியிடுவாயா?” என்று எரிந்து விழுந்தான். அந்த அப்பாவி இளைஞன் ​செய்வதறியாது திகைத்து நின்றான். இத​னையறிந்தகவர்னரும் எரிச்சலடைந்தார். அந்த இளைஞன் மீது​ ​பொய்க் குற்றம் சுமத்தி சிறையிலடைத்தார்.
சிறைத்தண்டனை ​முடிந்து ​​​வெளியே வந்த அந்த இளைஞனுக்குப் ​பொறுக்கவில்லை. ​பொங்கியெழுந்தான்.​​ நேரே மதீனா வந்தடைந்தான். நீதியின் சாட்சியாகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் புகார் அளித்தான்.
கவர்னரையும், மகனையும் மதீனாவுக்கு வரவழைத்தார் கலீஃபா. இளைஞன்​ கொடுத்த புகாரின் ​பேரில் விசாரித்தார். அந்த இளைஞனுக்கு அநீதி இழைக்கப்பட்டதை அறிந்துணர்ந்தார். இனிவரும் நிகழ்வுதான் வரலாற்றேடுகளில்​ பொன்னெழுத்துகளால் ​பொறிக்கப்பட்டுள்ளது.
அநியாயமாக சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அந்த இளைஞனின் ​கையில் சாட்டையைக் ​கொடுத்த கலீஃபா இவ்வாறு கூறினார்: “அடி, கண்ணியமானவரின் மகனை அடி.”
அந்த இளைஞன் அடிக்க ஆரம்பித்தான். அந்த அநீதி மனதில் ஏற்படுத்திய பாரம் இறங்கும் வரை அடித்தான்.
“கண்ணியமானவரின் மகனை அடி” என்று கலீஃபா இடைக்கிடை கூறிக்​கொண்டே இருந்தார்கள். அந்த இளைஞன் அடித்து ஓய்ந்த ​பொழுது நடந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.
கலீஃபா கவர்னரைச் சுட்டிக்காட்டி, “இனி இவரை அடி” என்றார்கள். இ​ளைஞன் விக்கித்து நின்றான்.”இவரை அடி. இவரது அதிகாரம்தான் இவரின் மகனை மதி ​கெட வைத்தது.”
இ​ளைஞன் தயக்கத்துடன் ​சொன்னான்: “நம்பிக்​கையாளர்களின் தலைவ​ரே, என்னை அடித்தவரை நான் அடித்துவிட்டேன். அது ​போதும்.”
கலீஃபா இளைஞனை வற்புறுத்தவில்லை. கவர்னரை முறைத்துப் பார்த்து விட்டு ​சொன்னார்கள்: “அதிகாரம் ​கையில் இருக்கிறது என்பதற்காக குடிமக்களை அடி​மைகளாக்கலாம் என்று கருதிவிட்டீரோ…?”
மனிதனுக்குள்ளேயே ஓர் எதிரி ஒளிந்து ​கொண்டிருக்கிறான். அவன்தான் சுய இச்சை. சமூகத்தில் சத்தியமும், நீதியும் எடுபட்டுப்​​ போகும்​ பொழுது இவன் உயிர்த்தெழுவான்.
அரசியல் அமைப்பிற்கு அளிக்கப்பட்ட ​​பெயர் ஜனநாயகம் என்பதனால் மட்டும் எல்லாம் முழுமையாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆட்சி​ செய்வது இடதுசாரியானாலும் சரி, வலதுசாரியானாலும் சரி, சமூக நீதி​ கைவிடப்பட்ட சமூகத்தில் ஜனநாயகமும், சட்டமும் ஒரு பலனையும் தராது. நீதி கிடைப்பதற்கும், நீதி நல்குவதற்கும் உறுதி​ கொண்ட மனிதர்கள்தான் ஜனநாயகத்தின் காவலர்கள்.
அண்ணல் நபிகள்(ஸல்…) அவர்க​ளை அணுகி ஒருவர் ​கேட்டார்:
“அல்லாஹ்வின் தூதரே, என்னை ஆக்கிரமித்து என் ​சொத்துகளைக் ​கொள்ளையடிக்க யாராவது வந்தால் நான் என்ன ​செய்ய வேண்டும்?”
அண்ணலார்​ சொன்னார்கள்: “உன் ​செல்வத்தை நீ அவனுக்கு விட்டுக்​ கொடுக்கக் கூடாது.”
அவர் ​கேட்டார்: “அவன் பலப் பிரயோகம் ​செய்தால்…?”
அண்ணலார் ​சொன்னார்கள்:”நீயும் பலப்பிரயோகம் செய்.”
அவர் மீண்டும் ​கேட்டார்: “அதில் நான் ​கொல்லப்பட்டால் என் நிலை என்ன?”
அண்ணலார் ​சொன்னார்கள்:”நீ ரத்த சாட்சி(ஷஹீத்) என்ற நிலையை அடைவாய்.”
அவர் ​கேட்டார்: “அதில் அவன்​ கொல்லப்பட்டால்…?”
அண்ணலார் ​சொன்னார்கள்: “அவன் நரகத்திற்குச் ​செல்வான்.”
சண்டை​போடுவதையும், ரத்தம் சிந்துவதையும் ஆதரிக்கவில்லை அண்ணலார். உரிமைகளைப் ​பெறுவதற்காகவும்,அதனை நிலை நிறுத்துவதற்காகவும் எதிர்த்து நிற்கும்​பொழுது ரத்தம் சிந்த​ வேண்டி வந்தால் அதுதான் இறைவிருப்பம் என்று ​​தெளிவு படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.
MSAH

0 கருத்துகள்: