கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

துபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 16.01.2012 திங்கட்கிழமை மாலை லோட்டஸ் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் உள்ளிட்டோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு மலர் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.


ஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்துக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தினை நினைவு கூர்ந்தார்.

மேலும் சிறுபான்மை மக்களுடன் தனக்குள்ள இணக்கமான நட்பினை விவரித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழக எம்பிக்கள் குழு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வருகை புரியவேண்டியதன் அவசியம் குறித்தும் வளைகுடாத் தமிழர்களின் நிலை குறித்து அறிய வேண்டியதையும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் எடுத்துரைத்ததை ஆமோதித்து அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைஅக்துபாய் லேண்ட்மார்க் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, அஜ்மான் ஆரிஃபின் குழும மேலாணமை இயக்குநர் ஆரிஃப், ஈமான் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தேரா டிராவல்ஸ் மேலாளார் ஹாஜா முஹைதீன், அஜ்மான் ஹமீது, அம்மாபட்டிணம் அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், அப்துல்லாஹ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: