கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உள்ளமே உயர்ந்திடு!

manathodu-manathai1-270x138
வாழ்க்கைச் சூழல்கள் ஒட்டி நிற்கின்ற எட்டு காரியங்களை ஒரே வசனத்தில் பொதிந்து, இறைவன் மனிதனின் விருப்பங்களை இதோ இவ்வாறு கேட்கின்றான்:

(நபியே) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (சூரா அத்தவ்பா9:24)

தந்தைமார்கள், பிள்ளைகள், சகோதரர்கள், மனைவிமார்கள், குடும்பத்தார்கள், செல்வம், வியாபாரம், வீடு – இவை ஒரு மனிதனின் சிந்தனையில் எப்பொழுதும் நிறைந்திருப்பவை.

இந்த அம்சங்கள் ஒன்று சேர்ந்து மனிதனை ஒரு வளையத்திற்குள் மாட்டி விட்டுள்ளன.

இந்த வளையத்திற்கு வெளியே அந்த அம்சங்களுக்கு ஆதரவான சில விஷயங்களும் உள்ளன. அவை சடங்குகளும், சம்பிரதாயங்களும் அடங்கிய உலகம்.

இந்த இரண்டு கூடுகளுக்கிடையில் வேலிகள் இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மனிதன் விருப்பப்பட்ட பொழுதெல்லாம் மாறிக்கொள்கின்றான்.

இந்தக் கூடுகளுக்கு அப்பாற்பட்டு யதார்த்தங்களைக் கொண்ட இன்னொரு உலகம் உண்டு. அங்கேதான் சரியும், தவறும் – நன்மையும், தீமையும் வேறு பிரிந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் இருக்கவேண்டியது நன்மையா, தீமையா என்பது அங்கேதான் தீர்மானிக்கப்படுகிறது. மேலாதிக்கம் செலுத்துவதற்கான போராட்டங்கள் அங்கேதான் அரங்கேறுகின்றன. சண்டை, சச்சரவுகள் சதா நடக்கின்றன.

வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் இந்த விஷயங்கள் குறித்து மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் இவ்வாறு போதிக்கின்றான்:

(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் – அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (சூரா அத்தவ்பா9:19)

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், சடங்குகளுக்கும் அப்பால் ஈமான் கொண்ட விசுவாசிகளுக்காக அல்லாஹ் நிர்ணயித்து வைத்ததுதான் வாழ்க்கையின் இந்த மூன்றாவது பகுதி.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்.இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின் (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர். எனினும் அவர்களில் பலர் (இறைக் கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (சூரா ஆல இம்ரான்3:11)

உலகம் என்றென்றும் நினைவு கூரும் மகான்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள். அவர்களெல்லாம் இந்த வாழ்க்கையின் மூன்றாவது பகுதியில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்ந்த சமூகம் அவர்களது அருமையை உணர்ந்திருந்தது மிக மிகக் குறைவு. பின்னர் வந் தசமூகங்கள்தாம் அவர்களை அறிந்துணர்ந்துள்ளார்கள்.

இறுதித் தூதர் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தலையுயர்த்திய தீமைகளில் மிக முக்கியமானது குலப்பெருமை. தன்னை நபி என்று அறிவித்த முஸைலமாவை ரபீஆ கோத்திரத்தார் ஆதரித்தனர்.

அவனைக் கொலை செய்ய முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அனுப்பிய படையில் ஒரு பெண்ணும் இருந்தார். போர்க்களத்தில் அந்தப் பெண் வாளைச் சுழற்றிச் சுழற்றிப் போராடினார். “பொய்யன் முஸைலமா எங்கே?” என்று அவர் ஆர்த்தெழுந்து ஒரு பெண் சிங்கத்தைப் போல் பாய்ந்தார். அவருடைய கையில் வெட்டு ஏற்பட்டது. காயம் பட்ட கையோடு அவர் முஸைலமாவை நெருங்கினார். குடும்ப வாழ்க்கையை மீறி மற்றொரு உலகத்தை எட்டிப் பிடித்தார். அவர்தான் உம்மு அம்மாரா (ரலி) என்ற மங்கைச் சிங்கம்!

இப்படி புதிய உலகத்தை – மூன்றாவது உலகத்தை எட்டிப் பிடித்தவர்களே இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுகிறார்கள்.
MSAH
http://www.thoothuonline.com/

0 கருத்துகள்: