கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சர்க்கரை நோயுள்ளவருக்கு இதய பாதிப்பு!

"சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படும்" என இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் மருத்துவர் சடகோபன் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ கழகத்தின் மதுரை கிளை மற்றும் கல்லூரி பயிற்சி பொது மருத்துவர்கள் சார்பில் சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் பாதிப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. இந்திய மருத்துவ கழகத்தின் செயலாளர் மருத்துவர் அமானுல்லா வரவேற்றார். தலைவர் மருத்துவர் சடகோபன் தலைமை தாங்கி பேசினார்.


அவர் பேசும்போது, "தற்போது நாட்டில் சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது. அதிக பருமன் உள்ளவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொழுப்பு சத்து உள்ளவர்களுக்கும் இது வரலாம். நவீன சிகிச்சை மூலம் கொழுப்புச் சத்தை அகற்றி சர்க்கரை நோயைத் தடுக்கலாம். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும். தற்போதைய நவீன சிகிச்சை முறையால் சர்க்கரையைத் தடுக்க முடியும். எனவே பொதுமக்களுக்குச் சர்க்கரை நோய் குறித்த நல்ல விழிப்புணர்வு தேவை" என்றார்.

தஞ்சையைச் சேர்ந்த மருத்துவர் மோகன்தாஸ் பேசுகையில், "சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக பெரும்பாலானோருக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறுநீரக தானம் செய்ய யாரும் தைரியமாக முன்வருவதில்லை. இதனால் சிறுநீர தானம் கொடுப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்ப நிலைலேயே சர்க்கரை நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை பெற்றுவிட்டால் சிறுநீரகம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுமக்கள்தான் சர்க்கரை நோயில் இருந்து தங்களைப் பாதுகாக்க முன்கூட்டியே விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்" என்றார்.
http://www.inneram.com/2011112820404/diabetes-cause-heart-disease

0 கருத்துகள்: