கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

செல்போன்களுக்கு வரும் தேவையற்ற வெளிநாட்டு அழைப்புகளை தவிர்த்துவிடுங்கள்

சென்னை,ஜுலை.9-
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பி.எஸ்.என்.எல். தந்துள்ள இந்தியா முழுவதுக்குமான `கோட்’எண் +91 ஆகும். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல்.
 வாடிக்கையாளர்கள் சிலரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.
அதில் +23 என்று தொடங்கும் பல எண்களில் இருந்து `மிஸ்டு’அழைப்புகள் வருவதாகவும்,அந்த அழைப்பை மீண்டும் தொடர்பு கொண்டால்,அதிக பணத்தை பி.எஸ்.என்.எல். பிடித்தம் செய்துகொள்வதாகவும் புகார்கள் கூறுகின்றனர்.
பொதுவாக +2392879064,+2392879062,+2392879051,+2392879106 ஆகிய எண்களில் இருந்து `மிஸ்டு’அழைப்புகள் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள்,சாவ்டோம் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அழைப்புகள் வருவதாக அறியப்படுகிறது. எனவே தெரியாத நாடுகளில் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை தவிர்த்து விடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
thanks: lalpetexpress.com

0 கருத்துகள்: