கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சவுதி வேலைகள் 6 வருடங்களா!!! சரியான விளக்கம்.

ரியாத், சவுதி அரேபியா: “வெளிநாடுகளில் இருந்து வந்து சவுதியில் வேலை செய்யும் அனைவரும் ஆறு வருடங்களின்பின் திருப்பி அனுப்பப்படுவார்கள்” இப்படியான ஒரு பேச்சு பரவலாக அடிபட்டுக்கொண்டிருக்கின்றது. இதுபற்றி சவுதி அரேபியாவின் குடிவரவுத் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது.


• மேலேயுள்ள கூற்று, சில தனியார் நிறுவனங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதாவது, ‘வேலை தேசியமயமாக்கல்’ திட்டத்தில் பங்கெடுக்காத நிறுவனங்களில் வேலை செய்வோரையே, இது பாதிக்கும்.
• ‘வேலை தேசியமயமாக்கல்’ திட்டம் என்பது, சவுதியில் இயங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதிப் பிரஜைகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். சரியான சதவீதத்தில் சவுதிப் பிரஜைகளுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு பச்சை புள்ளி வழங்கப்படும். அப்படிக் கொடுக்காத நிறுவனங்களுக்கு மஞ்சள், அல்லது சிவப்பு புள்ளி வழங்கப்படும்.
• பச்சைப் புள்ளி பெற்ற நிறுவனங்கள், தமது நிறுவனத்தில் வேலை செய்யும் வெளிநாட்டவரின் வேலை விசாக்களை, ஆறு வருடங்களின் பின் புதுப்பிக்கலாம். அதில் சிக்கல் ஏதுமில்லை.
• மஞ்சள் புள்ளி நிறுவனங்கள், கூடுதலான சில சவுதிப் பிரஜைகளுக்கு வேலை கொடுப்பதன் மூலம், தமது நிறுவனத்தில் வேலை செய்யும் வெளிநாட்டவரின் விசாவை ஆறு வருடங்களின்பின் புதுப்பிக்கலாம்.
• சிவப்புப் புள்ளி பெற்ற நிறுவனங்கள், தம்மிட்ம் வேலை செய்யும் வெளிநாட்டவரின் விசாவை புதுப்பிக்க முடியாது.
மொத்தத்தில், சவுதியில் வேலை செய்யும் ஒருவர், தான் வேலை செய்யும் நிறுவனம் எந்தப் புள்ளி பெற்றிருக்கின்றது எனத் தெரிந்துகொள்வது நல்லது. சிவப்புப் புள்ளி பெற்ற நிறுவனம் என்றால், சிக்கல்தான்! 6 வருடங்களுக்குமேல் அதே நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது!
Thanks: Rishie
http://lalpet.com/?p=2276#more-2276

0 கருத்துகள்: