கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அண்ணாபல்கலை கழகத்தில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்கான விண்ணப்படிவம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது.  இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது

M.Sc. M.Phil  நுழைவு தேர்வை பற்றிய விபரங்கள்

விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி : 10/05/11
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : The Director (Admissions), Anna University, Chennai 600 025
விண்ணப்பத்தின் விலை : ரூ.600
தேர்வு நடைபெறும் தேதி : 05.06.2011
M.Sc. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள் :
1 M.Sc. Applied Mathematics (தகுதி : B.Sc. Mathematics (or) B.Sc. (Applied Science) படித்து இருக்க வேண்டும்)
2 M.Sc. Materials Science/Medical Physics  (தகுதி : B.Sc. Physics கணிதம் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும் (or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
3 M.Sc. Applied Chemistry (தகுதி : :B.Sc. Chemistry கணிதம்,  இயற்பியல் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும்(or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
4 M.Sc. Applied Geology (தகுதி : :B.Sc. (Geology/Applied Geology/Physics/ Chemistry/Environmental Science/Applied Science) படித்து இருக்க வேண்டும்)
5 M.Sc. Electronic Media (SS)  (தகுதி :  ஏதாவது ஒரு B.Sc. படிப்பு அல்லது B.A. (Journalism / Visual Communication / Mass Communication) படித்து இருக்க வேண்டும்)
6 M.Sc. Science and Technology Communication (SS) (தகுதி :  ஏதாவது ஒரு பட்ட படிப்பு அல்லது.+2 – ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் படித்து இருக்க வேண்டும்)
7 M.Sc. Environmental Science (SS)   (தகுதி :  ஏதாவது ஒரு B.Sc. படிப்பு, வேதியியல், உயிரியல் ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள் www.annauniv.edu/msc2year/index.php என்ற இணையதளத்தில் உள்ளது.
M.Phil. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள் :
1 M.Phil. Mathematics  (தகுதி : M.Sc. (Mathematics/Applied Mathematics) படித்து இருக்க வேண்டும்)
2 M.Phil. Physics  (தகுதி : M.Sc. (Physics/Medical Physics/ Material Sciences)படித்து இருக்க வேண்டும்)
3 M.Phil. Crystal Science   (தகுதி : M.Sc. (Physics /Material Science /Medical Physics /Chemistry / Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)
4 M.Phil. Chemistry  (தகுதி : M.Sc. (Chemistry/Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)
5 M.Phil. Applied Geology  (தகுதி : M.Sc. (Geology/Applied Geology) படித்து இருக்க வேண்டும்)
6 M.Phil. English  (தகுதி : M. A. (English) படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள் www.annauniv.edu/mphil2011/index.php என்ற இணையதளத்தில் உள்ளது.
இந்த நுழைவு தேர்வை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், தேர்விற்க்கு தயாராகும் வழி முறைகள் அறிந்து கொள்ளவும் sithiqu.mtech@gmail.com என்ற ஈ – மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

0 கருத்துகள்: