கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உடம்பெல்லாம் எரியுதா? சீதாப்பழம் சாப்பிடுங்க - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.


அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது.
வெயில் காலத்தில் நெல்லிக்காய் சந்தைக்கு வரும். அதை வாங்கி வாயில் பாட்டு சுவைத்தால் உடம்புக்கு குளிர்ச்சி. எவ்வளவு தூரம் நடந்தாலும் களைக்காது. நெல்லிக்காய் வற்றலை வாயில் போட்டு புட்பால் விளையாடினால் ரொனால்டோவை கூட மிஞ்சி விடலாம். அது தான் ஒவ்வை கொடுத்த நெல்லிக்கனிக்கு சிறப்பு.சரி அதை பிறகு பார்க்கலாம்.

இப்போது சீத்தாப்பழ சீசன். சின்னப்பிள்ளைகள் கையில கெடச்சா அப்படியே ஒவ்வொரு விதையிலயும் ஒட்டியிருக்கிற வெண்மை நிற கரகரப்பான இனிப்போட இருக்கிற சதையை சீதாப்பழத்துல இருந்து எடுத்து சாப்பிடற விதமே அழகு. இந்த பழத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு சீதாப்பழ மரத்தை நடுங்கள்.

சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் கஸ்டர்ட் ஆப்பிள் என்று பெயர். இதன் மரப்பெயர் அனோனா ஸ்குவோமோசா. தென்அமெரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் பயிரானது. அதாவது இதன் தாய்வீடு அமெரிக்கா பகுதிகள் தான். இந்தியாவிலேயே தென்இந்திய பகுதிகளில் தான் ரொம்பவே செழிப்பா வளருது. இந்த சப்போட்டா மரம் விதை,நெருக்கு ஒட்டு முறைகளால் கன்றுகளாக வளர்க்கப்பட்டு சிறிய மரமாக வளர வகை செய்யப்படுகிறது. எவ்வளவு தான் வெயிலிடிச்சாலும், மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்த்து சளைக்கமால் வளரும் இந்த சீதாப்பழம்.

விதையை வெச்சு சாகுபடி செஞ்சா சீதாசெடி மரமா வளர்ந்து வர்றதுக்கு 4 ஆண்டு ஆகும். நெருக்கு ஒட்டு மூலம பதியமா போட்டு வளர்த்தா,இரண்டாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஒரு மரத்தில இருந்து ஆண்டுக்கு 25 முதல் 30 கிலோ பழங்கள் கிடைக்கும்( நீங்க சாப்பிட்டது போக பக்கத்துக்கு வீட்டுக்கு காரங்களுக்கு விக்கலாம்)

சப்போட்டா மரத்துல இருந்து அது காயா இருக்கும் போதே பறிச்சு பழுக்க வெக்கணும். பழத்திலிருந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். இதில இருக்கிற சத்துக்கள பார்ப்போம்.

புரதம் 1.6, கொழுப்பு 0.4,நார்ப்பொருள் 3.1,மாவுப்பொருள் 23.5,கால்சியம் 17 மிகி.இரும்பு 1.5 மிகி,தயமின் 0.07,ரைபோபிளவின் 0,17மிகி,நியாசின் 1,3 மிகி,வைட்டமின் சி 37 மிகி,மெக்னீசியம் 48 மிகி,பொட்டாசியம் 340 மிகி,தாமிரம் 0,52 மிகி,குளோரின் 37 மிகி,ஆக்சாலிக் அமிலம் 30 மிகி,சக்தி 104 கலோரிகள்.

மருத்துவ குணஙகள் இதில் அதிகமாக இருக்கிறது. சீதாப்பழ மரத்தின் இலை,பட்டை,காய்,பழம்,விதை அனைத்துமே மருந்து தான். காய்துவர்ப்பாக இருப்பதால் கழிச்சல்,சீதக்கழிச்சல் இருக்கும் போது சாப்பிடலாம். சற்று நேரத்தில் இந்த கழிச்சல் நோய் சரியாக போகும். பழம் இனிப்பாகவும், சுவையாகவும் இருப்பதால் ரத்தம் அதிகம் ஊற வழிசெய்யும்.

உடல் வெயிட் போட நினைப்பவர்கள் நிறைய சீதாப்பழம் சாப்பிட்டால் போதும். சில மாதங்களில் நன்றாக குண்டாகி விடலாம். பழம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக இருப்பதால் உடல் எரிச்சல் இருப்பவர்கள் இதை வாங்கி சாப்பிட்டு உடலின் எரிச்சலை தணிக்கலாம்.

வாந்தி அதிகம் இருக்கும் போது சீதாப்பழம் சாப்பிட்டால் வாந்தி நின்று போகும். டி,பி என்ற காசநோய் இருக்கும் நோயாளிகள் சீதாப்பழத்தை கண்டிப்பாக சாப்பிடணும். ரொம்ப நல்லது. காசநோயின் தீவிரத்தை குறைக்கும்.

சீதாப்பழத்தின் விதைகளை பொடியாக ஆக்கி ஆறாத புண்களின் மேல் போட்டால் அந்த புண்கள் நாளடைவில் காய்ந்து ஆறிவிடும். அதே போல் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து புண்களின் மேல் பற்று போல் போட்டாலும் புண்கள் ஆறிவிடும்.

பிரேசில் நாட்டில் இலைகளை அரைத்து பற்று போட்டு புண்களை குணப்படுத்துகிற பழக்கம் இப்போதும் உண்டு.தலையில் பேன்கள் அதிகம் இருந்தால் விதையின் பொடியை தலைக்கு தேய்த்து குளித்தால் பேன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

நன்றி - தமிழ்நாடுவேளாண் பல்கலைக்கழகம்.

0 கருத்துகள்: