கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தேர்தல் : கட்சிகளுக்கு/வேட்பாளர்களுக்கு நடத்தை விதிகள்

ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செய்யத்தக்கவை:
* தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கான இடத்தை காவல்துறை, அனைத்து தேர்தல் கட்சிகளுக்கும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கும்  நியாயமான முறையில் ஒதுக்கித் தர வேண்டும்.
* பிற அரசியல் கட்சி வேட்பாளர்களை விமர்சனம் செய்யும் போது, அவரது கடந்த கால செயற்பாடுகள் பற்றி தான் பேச வேண்டும்.
* ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த, முன்அனுமதி அவசியம்.
* பொதுக்கூட்டத்தை சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, காவல்துறை  உதவியை நாட வேண்டும். தன்னிச்சையாக செயற்படக் கூடாது
* ஊர்வலம் நடத்துவதற்கு முன், காவல்துறை  அனுமதி கட்டாயம். ஊர்வலம் துவங்கும் இடம், முடியும் இடத்தை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
* தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.
* தேர்தல் நாளில் வாக்காளருக்குத் தரப்படும் அடையாள சீட்டில், கட்சி பெயர், சின்னம் இருக்கக் கூடாது.
* வாக்குப்பதிவு நாளில், வாகனக் கட்டுப்பாட்டை, அரசியல் கட்சிகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
* தேர்தல் ஆணையம்  அனுமதி பெற்றவர் மட்டுமே, வாக்குச் சாவடிக்குள் செல்ல வேண்டும். முதல்வர், அமைச்சர், எம்.பி., – எம்.எல்.ஏ., ஆகியோருக்கும் இது பொருந்தும்.
செய்யத்தகாதவை :
* அமைச்சர்கள் யாரும் வேட்பாளராகவோ, முகவராகவோ இல்லாத பட்சத்தில், வாக்கு  எண்ணிக்கை மையத்திற்குள் செல்லக் கூடாது.
* கருத்து வேற்றுமைகளை அதிகரிக்கும் வகையிலும், பரஸ்பர வெறுப்பை அதிகரிக்கும் வகையிலும், பதட்ட நிலையை அதிகப்படுத்தும் வகையிலும், வேட்பாளர் பேசக் கூடாது.
* கோவில், பள்ளிவாசல், சர்ச் போன்ற வழிபாட்டு தலங்களில், வேட்பாளர்கள் பிரசாரம் செய்யக் கூடாது.
* ஓட்டுக்கு லஞ்சம், தகாத வார்த்தை பயன்படுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்றவை குற்றமாகும்.
* அரசு சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது.
* பிற அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில், குழப்பம் செய்யக்கூடாது.
* பிற கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம் நடக்கும் வழியில் ஊர்வலம் செல்லக் கூடாது. பிற கட்சியினரின் சுவரொட்டிகளைச் சேதப்படுத்தக் கூடாது.
* தேர்தலன்று மது வகைகள் விற்க அனுமதியில்லை.
* தேர்தலன்று ஓட்டுச்சாவடி அருகே கட்சி சார்ந்த துண்டுசீட்டு, சுவரொட்டிகள் , கொடிகள், தேர்தல் சின்னங்கள் வைக்க அனுமதியில்லை.
இவை மட்டுமின்றி தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் உத்தரவுகளை, வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும்

0 கருத்துகள்: