கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தி.மு.க-காங்கிரஸ் விரிசல்: ஆதரவும்-எதிர்ப்பும்

தி.மு.க-காங்கிரஸ் விரிசல்:
 
ஆதரவும்-எதிர்ப்பும்
தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த 7 ஆண்டுகளாக இருந்த நட்பு திடீரென முறியும் என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தி.மு.க-காங்கிரஸ் விரிசலை அரசியல் தலைவர்கள் பலரும் எதிர் பார்த்து காத்திருந்தவர்கள் போல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தி.மு.க-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வெளியாகி உள்ள கருத்துக்கள் அரசியலை மேலும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுவதாக அறிவித்ததும், தமிழக காங்கிர தலைவர்கள் அனைவரும் வாயை இறுக மூடிக் கொண்டனர்.
ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை. பொறுத்து இருந்து பாருங்கள் என்று மட்டும் கூறினார்கள். ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகி இருப்பதன் மூலம் தமிழக காங்கிரசுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்துள்ளது என்றார். ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், காங்கிரஸ் 90 தொகுதி கேட்டது. இறுதியில் 60 இடத்துக்கு சம்மதித்தோம். எனவே எங்களால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்றார்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் தி.மு.க. விலகலுக்கு கவலை தெரிவித்து கருத்துக் கூறவில்லை. பிரணாப் முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் கூறுகையில், பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என்று மட்டுமே கூறினார்கள். மத்திய மந்திரி நாராயண சாமி கூறுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது.சோனியா இறுதி முடிவு எடுப்பார் என்றார்.
இன்று காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எந்த கருத்தும் சொல்லவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எதுவும் பேசக்கூடாது என்று மேலிடம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதால் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆழ்ந்த மவுனத்தில் மூழ்கி உள்ளனர்.இதற்கிடையே தி.மு.க- காங்கிரஸ் விலகலை அதிகரிக்கும் வகையில் தி.மு.க. தலைவர்கள் யாரும் கருத்து சொல்லவில்லை.
தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் இருவரும், காங்கிரசுடன் இப்போதும் தி.மு.க. நட்பாகவே உள்ளது. காங்கிரஸ் பேச முன் வந்தால் பேசுவோம் என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க.வின் தோழமை அமைப்புகளான திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க-காங்கிரஸ் விரிசலை வரவேற்றுள்ளன.
காங்கிரசின் நிபந்தனைகளுக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம். தி.மு.க. தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் விலகலை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளார். இதற்காக அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்தினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரசிடம் இருந்து தி.மு.க. விலகி இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
தி.மு.க.வின் தோழமை கட்சிகளில் பா.ம.க. மட்டும், காங்கிரஸ் விலகலால் கவலை அடைந்துள்ளது. தி.மு.க-காங்கிரஸ் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகளில் பா.ம.க. தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க-காங்கிரஸ் விரிசலை மற்ற கட்சியினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகி இருப்பது காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு நெருக்கடி என்றும், அதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பா.ஜ.க. மேலிடம் கூறி உள்ளது.
தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், காங்கிரசிடம் இருந்து தி.மு.க. விலகியதற்கு தொகுதி பங்கீடு பிரச்சினை மட்டுமே காரணம் அல்ல. வேறு காரணங்களும் உள்ளன என்று கூறி உள்ளார். சுப்பிரமணியன் சுவாமி, துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோரும் தி.மு.க-காங்கிரஸ் விலகலில் ஏதோ ஒரு உள் நோக்கம் இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
tanks;maalaimalar

0 கருத்துகள்: